
Viswasam Records : விஸ்வாசம் படத்தின் போஸ்டர் வெளியான 20 நிமிடத்தில் இருந்து இதுவரை என்னென்ன சாதனைகள் படைத்துள்ள என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்றிரவு வெளியை இருந்தது.
மோஷன் போஸ்டர் தாறு மாறாக செம மாஸாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அஜித் ரசிகர்களை தாண்டி விஜய் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டி.இம்மானின் கிராமத்து இசை ரசிகர்களை துள்ள வைக்கிறது.
இதனால் இந்த வருட பொங்கல் நிச்சயம் தல பொங்கலாக படு மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இந்த மோஷன் போஸ்டர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 50,000 லைக்ஸ்களை குவித்துள்ளது. தற்போது வரை 250 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
மோஷன் போஸ்டர் வீடியோ யூ ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.