Viswasam Status

Viswasam Record : விஸ்வாசம் திரைப்படம் அனைவர்க்கும் செம லாபம் என அதிகாரபூர்வமாக அறிவித்து ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்து இருந்தது.

படம் ரிலீசாகி 5 வாரங்கள் ஆகிய நிலையிலும் மக்கள் மத்தியில் இப்படத்திற்கான மவுசு குறைந்த பாடில்லை. தற்போது வரை பல தியேட்டர்களில் படம் ஹவுஸ் புல்லாகவே சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் படு லாபம் கொடுத்துள்ள திரைப்படம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் இதற்காக #ViswasamUnstoppableHit என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.