Viswasam Re-Release in Malaysia
Viswasam Re-Release in Malaysia

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு வெல்கம் ட்ரீட்டாக விசுவாசம் கோமாளி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன.

Viswasam Re-Release in Malaysia : சீனாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனவைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரசால் இதுவரை 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன.

மலேசியாவிலும் கொரோனா வைரஸ் பரவி தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

விஜய், சூர்யாவை தொடர்ந்து தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான ட்ரீட்.!

இதனால் மலேசியாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் வெல்கம் ட்ரீட்டாக தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி ஆகிய திரைப்படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

இதனால் அங்குள்ள அஜித் மற்றும் ஜெயம் ரவி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.