Viswasam

Viswasam Rating : பொங்கலுக்கு வெளியாக உள்ள விஸ்வாசம் படத்திற்கு எதிராக சில சதிகள் நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் இதே தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படமும் வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் இளமையான தோற்றத்தில் நடத்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.

பிரபல இளையதளமான IMDB-யில் 2019-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? என ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் விஸ்வாசம் படம் ட்ரைலர் ரிலீசுக்கு முன்னரே அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தை பிடித்திருந்தது.

ஆனால் தற்போது ஒரே இரவில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது.

இதனால் இதில் விஸ்வாசம் படத்திற்கு எதிராக ஏதோ சதி நடந்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது IMDB இணையதள பக்கத்தில் பேட்ட படம் 82.5% ஓட்டுகளுடன் முதலிடத்தையும் விஸ்வாசம் படம் 2.7% ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.