Viswasam Overseas Release

Viswasam Overseas Release : விஸ்வாசம் படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் விஸ்வாசம்.

D இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இன்றோடு முழுமையாக முடிவடைந்தது என ஒளிப்பதிவாளர் வெற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்த அப்டேட்டை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஓவர்சீஸ் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது விசுவாசம் படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரான அருள் பாண்டியன் அவர்களின்
A & P குரூப்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.