Viswasam Adchi Thookku

Viswasam Adchi Thookku : விஸ்வாசம் சிங்கிள் டிராக் இணையத்தில் வெளியாகி அதிரடியை கிளப்பி வருகிறது. வெளியான விஸ்வாசம் சிங்கிள் டிராக்கால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என மிக பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.

அதன்படி தற்போது இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

எவ்வளவு நேரத்தில் எந்த அளவிற்கு லைக்ஸ்களையும் பார்வையாளர்களையும் பெற்று சாதனை படைக்க போகிறது என்பதையும் எந்தெந்த படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்க போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்

விஸ்வாசம் அடிச்சு தூக்கு படத்தின் சிங்கிள் டிராக் வீடியோ இதோ :

adchithooku Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva