Viswasam & Nayanthara

Viswasam & Nayanthara : விஸ்வாசம் படத்தின் இரண்டு லுக்கிலும் தன்னுடைய புகைப்படம் இடம் பெறாததால் நயன்தாரா வருத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைந்து தல அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். அஜித் ரெட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இதுவரை விஸ்வாசம் படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகியுள்ளன. இரண்டு லோகிலும் தல அஜித்தின் புகைப்படங்களே இடம் பெற்றிருந்தன.

இதனால் நயன்தாரா தன்னுடைய கெட்டப்பை வெளியிடவில்லை என வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே படக்குழுவினர் விரைவில் விஸ்வாசம் படத்தின் மூன்றாம் லுக்கை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அந்த லுக்கில் நயன்தாராவின் புகைப்படம் இடம் பெரும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் டீஸர், ட்ரைலர், பாடல்கள் என ஒவ்வொன்றாக தொடர்ந்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

குறிப்பாக இந்த வாரம் முதலே விஸ்வாசம் படத்திற்கான கொண்டாட்டம் தொடங்கி விடும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.