Viswasam
Viswasam

Viswasam : ’அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள்.. 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.

நேர்கொண்ட பார்வைக்கு வந்த சிக்கல், 5 நாளில் காத்திருக்கும் செக்.!

இப்படிப்பட்ட அஜித்துக்கு கடந்த சில நாட்களாக கசப்பான அனுபவமாகவே இருந்தது. உடற்காயம், விவேகம் தோல்வி என அஜித்தின் திரை பயணம் சற்று ஆட்டம் கண்ட ஆண்டாக 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளை சொல்லலாம்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான விஸ்வாசம் படம் அமைந்தது.

விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

thala

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது.

உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.

இத்தனைக்கும் அதேநாளில் ரஜினி – சன் பிக்ச்சர்ஸ் எனும் பிரம்மாண்ட கூட்டணியுடன் போட்டிபோட்டு அஜித் இந்த வெற்றியை ருசித்துள்ளார் என்பது அவரது செல்வாக்கை உணர்த்துகிறது.

இப்படி பல சிறப்புகளை கொண்ட விஸ்வாசம் வெளியாகி இன்று 100-வது நாள் என்றால் சும்மாவா. அதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் அசத்தி வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.