Viswasam Movie ReMake
Viswasam Movie ReMake

Viswasam Movie ReMake : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டய கிளப்பின.

இதுவரை அஜித் நடித்து வெளியான மொத்த படங்களிலேயே இப்படம் மட்டும் தான் மாபெரும் வசூலை அள்ளி குவித்தது . அதுமட்டும்மில்லாமல் விஸ்வாசம் படம் அன்மையில் அனைத்து படத்தின் டிஆர்பி சாதனையை அடித்து நொறுக்கி சாதனை படைத்து வருகிறது.

அஜித்துக்கு தம்பியான இளம் நடிகர்.. சூடு பறக்கும் வலிமை அப்டேட் – அது யார் தெரியுமா??

இந்தநிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், விஸ்வாசம் படத்தை கன்னட சினிமாவில் ரீமேக் செய்ய முடிவு செய்து உள்ளார்.

அதற்காக கன்னட திரையுலக முன்னணி நடிகரான சிவராஜ் குமாரிடம் விஸ்வாசம் படத்தை போட்டு காட்டி உள்ளார். படத்தை பார்த்த அவர் ” படம் எனக்கு பிடிக்கவில்லை ” எனும்படி கூறி உள்ளாராம்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர், நான் தங்களுக்கு வேறொரு கதையுடன் இயக்குனரை அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டு அங்கு இருந்து வந்து விட்டாராம். இதனை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்து உள்ளார்களாம்.