Viswasam With Sun TV

Viswasam With Sun TV : விஸ்வாசம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் விஸ்வாசம். நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார். இதற்காக #ViswasamWithSunTV என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

ஆனால் இது குறித்த அறிவிப்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்தோ அல்லது சன் டிவி நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிபிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here