Viswasam Motion Poster
Viswasam Motion Poster

Viswasam Motion Poster – விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித், நயன்தாரா நடித்துள்ள படம் விஸ்வாசம்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் மோஷன் போஸ்டர் யாரும் எதிர்பாராத விதமாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தல அஜித்தின் பெயர் தூக்கு துரை என்பது இந்த மோஷன் போஸ்டர் மூலமாக உறுதியாகியுள்ளது. அஜித்தின் இண்ட்ரோவிற்கு தம்பி ராமையா கொடுக்கும் வாய்ஸ் ரசிகர்களை மெர்சலாக்குகிறது.

மொத்தத்தில் விஸ்வாசம் இந்த பொங்கலுக்கு பக்கா கிராமத்து விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.