Viswasam Motion Poster Records

Viswasam Motion Poster Records : விஸ்வாசம் மோஷன் போஸ்டர் நேற்றிரவு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்திருந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

டி.இம்மான் இசையமைக்க நயன்தாரா, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

விஸ்வாசம் படத்தின் மோஷன் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நேற்று இரவு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தல அஜித்தின் டபுள் கெட்டப், டி.இம்மானின் கிராமத்து இசை என பட்டய கிளப்பி வருகிறது மோஷன் போஸ்டர். தற்போது இந்த மோஷன் போஸ்டர் யூ ட்யூபில் 1.7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

252 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் ட்விட்டரில் #ViswasamMotionPoster #ViswasamThiruvizha #ViswasamPongal2019 என பல ஹேஸ்டேக்குகள் த்விட்டேர் ட்ரெண்டிங்கில் வரிசை கட்டி நிற்கின்றன.

பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் இருந்து மோஷன் போஸ்டருக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.