Viswasam Mini Review

Viswasam Mini Review : தல அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம்.

டி.இம்மான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவில் ரூபனின் எடிட்டிங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார்.

நடிப்பு ராட்சசி நயன்தாரா, ஆச்சரியப்பட்ட அஜித் – சிவா சொல்லும் விஸ்வாசம் சீக்ரெட்ஸ்.!

ஜெகபதி பாபு அஜித்துக்கு வில்லனாக நடிக்க தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

வீரம் படத்தை போல பக்கா கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் இம்மான் இசை கிராமத்து வாசத்தை அதிகப்படுத்துகிறது.

அஜித், நயன்தாராவின் நடிப்பு, ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இன்டெர்வல் காட்சியில் இடம் பெரும் ரெயின் பைட் ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

அஜித்தின் வசனங்கள் தியேட்டரில் அனல் பறக்கும் வகையில் அமைந்துள்ளன.

விஸ்வாசம் கிளைமாக்ஸ் சீக்ரெட்டை உடைத்த பிரபலம் – இது செம ட்ரீட் தான்.!

யோகி பாபு, தம்பி ராமையா, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர்களின் காமெடி கலாட்டாவை ரசிகர்களை கலகலப்பாக சிரிக்க வைக்கிறது.

மொத்தத்தில் விஸ்வாசம் ஒரு மாறுபட்ட கிராமத்து கதையில் ரசிகர்களை ரசிக்க வைக்கும் படமாக அமைந்துள்ளது.