Ajith
தல அஜித்துக்கு தமிழக போலீஸ் கொடுத்துள்ள கெளரவம் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Viswasam Meme : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்புண்டு. அதற்கு காரணம் இவருடைய குணம் தான் என்று சொல்லலாம்.

ஆரம்பத்தில் எல்லா நடிகர்களை போல வாயில் தம், கையில் சரக்கு என நடித்த அஜித் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதையெல்லாம் தவிர்த்தார். நடிகைகளுடன் நெருக்கம் காட்ட கூட தயங்கினார்.

படங்களில் தன்னுடைய செயல்பாடுகள் எப்போதும் தன்னுடைய ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார்.

அதன் விளைவே விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கூட ஹெல்மெட் அணிந்து தலைக்கவசம் உயிர்கவசம் என்ற கருத்தை வலியுறுத்தி இருந்தார்.

தன்னுடைய மகளை காப்பாற்றும் காட்சியில் கூட ஹெல்மெட்டுடன் தான் நடித்திருப்பார். தற்போது விசியம் என்னவென்றால் இந்த காட்சியை வைத்து பெண்களுக்கு பாதிப்பு என்றால் காவலன் செயலியை பயன்படுத்துங்க என்பதை அறிவுறுத்தும் வகையில் விஸ்வாசம் பட காட்சியை வைத்து மீம் தயார் செய்து வெளியிட்டுள்ளது தமிழக போலீஸ்.

இதனை தான் தல ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.