Viswasam Making Video

Viswasam Making Video : விஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் விஸ்வாசம்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது விஸ்வாசம் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தங்களது யூ ட்யூப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதில் தல அஜித் சக கலைஞர்களுக்கும் மரியாதை கொடுத்து மிகவும் பணிவுடன் நடந்து கொள்கிறார். அதே போல் தன்னுடன் சண்டை போடும் ஸ்டண்ட் கலைஞர்களையும் டான்ஸ் ஆடும் நடன கலைஞர்களுக்கும் அந்த பணி முடிவடைந்ததும் கை கூப்பி நன்றி கூறுகிறார்.

அஜித்தின் இந்த செயல்பாடுகள் ரசிகர்களை மேலும் மேலும் ரசிக்க வைத்து வருகிறது.

இதோ அந்த மேக்கிங் வீடியோ உங்களுக்காக

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.