
Viswasam Intro : விஸ்வாசம் இன்ட்ரோ சீனை பார்த்து ரசிகர்கள் என்ன செய்ய போகிறார்களோ? என்று தெரியவில்லை என விஸ்வாசம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.
தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்காக நான்காவது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ளார்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது, இப்படத்தின் மூலம் மூலம் அஜித்திற்காக முதல் முறையாக இசையமைத்துள்ளார் டி.இம்மான்.
நயன்தாரான நாயகியாக நடித்துள்ளார். தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு, விவேக், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடிப்பவர் மனோகர். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஸ்வாசம் படத்தின் இன்ட்ரோ சீன் குறித்து பேசியுள்ளார்.
தல அஜித்தின் இன்ட்ரோ சீனை படப்பிடிப்பு தலத்தில் படமாக்கும் போதே பிரமிப்பாக இருந்தது, படப்பிடிப்பில் பார்த்த எங்களுக்கே அப்படி என்றால் ரசிகர்களுக்கு எப்படி இருக்குமோ? எப்படி கொண்டாட போகிறார்களோ என கூறியுள்ளார்.