Viswasam in Sathyam

Viswasam in Sathyam : சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் தற்போதில் இருந்தே மாஸ் காட்டத் தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தல அஜித், இவர் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என பலர் இணைந்து நடித்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதற்காக தல ரசிகர்களும் தற்போதில் இருந்தே மாஸாக கொண்டாட தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான சத்யம் தியேட்டர் முன்பும் விஸ்வாசம் பேனர்கள் வைக்க பட்டு மாஸ் காட்டி வருகிறது.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.