Viswasam Fever

Viswasam Fever : அஜித்தின் விஸ்வாசம் படத்திற்க்கு இப்படியொரு வெய்ட்டிங்கா என பார்ப்பவர்கள் பலரும் வியக்கும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் தற்போது விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுடன் நான்காவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி.இம்மான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரமேஷ் திலக் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்காக ரசிகர்கள் பலரும் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டு பீரோ முழுவதையும் விஸ்வாசம் போட்டோக்களால் நிரப்பியுள்ளார்.

இதனை ரசிகர்கள் பலரும் சமூக வளையதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க

Viswasam Fever