
Viswasam Diwali : இந்த வருட தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு மட்டுமில்ல தல ரசிகர்களுக்கும் தான்.
தல அஜித் தற்போது வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா அஜித்தின் தாய் மாமாவாக நடிக்கிறார்.
மேலும் விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்த படம் திடீரென பொங்கலுக்கு தள்ளி போனது. இதனால் தீபாவளிக்கு எதுவும் ஸ்பெஷல் இல்லையா என வருத்தப்பட்டு வந்தனர்.
ஆனால் அஜித் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் இருக்கு. அது என்னவென்றால் தீபாவளி ஸ்பெஷளாக விஸ்வாசம் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதனால் தல ரசிகர்களும் விஸ்வாசம் பட்டாசுகளுடன் தீபவாளியை கொண்டாடலாம்.
இதோ விஸ்வாசம் பட்டாசுகளின் புகைப்படம் உடனே வாங்கி கொண்டாடுங்க