
Viswasam & D.Imman : விஸ்வாசம் படத்தில் டி.இம்மானின் இசை ஏன் என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தல அஜித், நயன்தாரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் விஸ்வாசம்.
தம்பி ராமையா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இம்மான் இசையமைத்துள்ளார்.
விஸ்வாசம் படத்தின் மூலமாக இம்மான் அஜித்துடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார். திடீரென என்ன இந்த புது கூட்டணி என சிவாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு சிவா, நான் இம்மானின் தீவிர ரசிகன், அவரிடம் மனதை உருக்கும் மெலடியும் இருக்கு, தர லோக்கலான கிராமத்து இசையும் உள்ளது என கூறியுள்ளார்.
படத்தை தொடங்கும் போதே இந்த படத்துக்கு இம்மான் தான் இசை என முடிவு செய்து விட்டு தான் தயாரிப்பாளரிடம் கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல் தர லோக்கலான குத்து பாட்டு கூறியுள்ளார்.