Viswasam Celebration

Viswasam Celebration : விஸ்வாசம் 25 நாட்கள் கடந்து வெற்றி கரமாக ஓடி கொண்டிருப்பதை அஜித் ரசிகர்கள் பல விதமாக கொண்டாடி வருகின்றனர்.

இப்போது அறிவித்துள்ள சங்கரன் கோவில் ரசிகர்கள்கொண்டாட்டம் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது.

தல 59 டைட்டில் இது தானா? – பலரையும் கவர்ந்த போஸ்டர்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

இதனை அஜித் ரசிகர்களும் வித்தியாச வித்தியாசமாக கொண்டாடி வருகின்றனர்.

தல 59-ல் ரங்கராஜ் பாண்டே தான் வில்லனா? – வெளியான புது தகவல்.!

இந்த கொண்டாட்டங்களுக்கு இடையே சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் செய்துள்ள கண் பரிசோதனை முகாம் பலரையும் வியக்க வைத்தது மட்டுமில்லாமல் பாராட்டவும் வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here