Viswasam Booking Record

Viswasam Booking Record : டிக்கெட் புக்கிங்கில் புதிய சாதனை படைத்துள்ளது தல அஜித்தின் விஸ்வாசம் படம். இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

[ இதையும் படிங்க : தமிழகத்தில் தூக்குதுரை அலப்பறை தான் அதிகம் – அட்டகாசமான தகவல்.! ]

ரசிகர்கள் அனைவரும் தற்போதில் இருந்தே போஸ்டர், பேனர், கட் அவுட் என தமிழகம் முழுவதும் அதகளம் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு கொண்டாட்டமான தகவல் கிடைத்துள்ளது. ஆம் அது டிக்கெட் புக்கிங்கில் விஸ்வாசம் படைத்த சாதனை தான்.

திருச்சி ஏரியாவில் விஸ்வாசம் டிக்கெட் பாக்கிங் தொடங்கிய ஒரே ஒரு நிமிடத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் பல காட்சிகள் ஹவுஸ் புல்லாகியுள்ளது.

[ இதையும் படிங்க : தெறிக்க விடலாமா?? பாட்டி தீவிர அஜித் வெறியை போல – வீடியோவை நீங்களே பாருங்க.! ]

இதன் மூலம் மிக மிக குறைந்த நேரத்தில் அதிக காட்சிகள் ஹவுஸ் புல்லான ஒரே படம் விஸ்வாசம் தான் என்ற சாதனையை தல அஜித் ரசிகர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.