Viswasam Album Records
மாஸ்டர் பட சாதனைகளுக்கு நடுவே அஜித்தின் விஸ்வாசம் பட பாடல்கள் படைத்துள்ள சாதனையை இம்மான் தெரியப்படுத்தியுள்ளார்.

Viswasam Album Records Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை அள்ளி அள்ளி கொடுத்த திரைப்படம் விஸ்வாசம்.

அஜித்தே சொல்லிட்டாரு அப்புறம் என்ன?? அரங்கத்தை அதிர விட்ட ரங்கராஜ் பாண்டே – என்ன நடந்துச்சு தெரியுமா?

அஜித், நயன்தாரா, விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, கோவை சரளா என பலர் இணைந்து நடித்திருந்த இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் டி. இம்மான் இசையில் செம ஹிட்டடித்தன.

தற்போது இப்படத்தின் ஆல்பம் வீடியோ 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டி இம்மான் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.