Viswasam Album Record in YouTube

தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தின் ஆல்பம் யூ டியூப்பில் பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

Viswasam Album Record in YouTube : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனர் வினோத் இயக்க ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் இப்படத்தின் அப்டேட் காக்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் படைத்துள்ள சாதனை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த படத்தின் ஆல்பம் யூடியூப்பில் தற்போது 500 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதாவது 50 கோடி பார்வையாளர்கள் இந்த ஆல்பம் பாடல்களைக் கேட்டு ரசித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் வெளியாக அஜித் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை பட அப்டேட் வெளியாகவில்லை என சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.