Viswasam Ajith Response

Viswasam Ajith Response : விஸ்வாசம் வெற்றி பற்றி தயாரிப்பாளர் கூறியதற்கு அஜித் ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளார். அவர் என்ன கூறினார் என்பதை தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பலர் இணைந்து நடித்திருந்த படம் விஸ்வாசம்.

விஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.!

ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதியும் வசூலிலும் தொடர் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த வெற்றி குறித்து அஜித் என்ன சொன்னார் என்பதை படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் நான் அஜித்திற்கு போன் செய்து படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ரசிகர்களும் உங்களை அதிகம் ரசிக்கிறார்கள் என கூறினேன்.

அதற்கு தல அஜித் எல்லாம் கடவுள் கையில் உள்ளது என ஒரே வார்த்தையில் பதிலளித்தார். இவ்வாறாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here