Viswasam 50th Day Celebration

Viswasam Records : 50-வது நாளிலும் விஸ்வாசம் திரைப்படம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது.

இன்று இப்படத்திற்கான 50-வது நாள் கொண்டாட்டம் பல்வேறு தியேட்டர்களில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது தற்போது வரை இப்படம் 125 தியேட்டருக்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடி கொண்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் தியேட்டர்கள் மூலமாக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் விஸ்வாசம் திரைப்படம் பெற்றுள்ளதாகவும் படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகிஸ்தர்களுக்கு கிட்டதட்ட ரூ 70 முதல் 80 கோடி வரை பங்கு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.