Viswasam 3rd Look

Viswasam 3rd Look : விஸ்வாசம் 3rd லுக் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. இதனால் விரைவில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்தன.

இதுவரை இப்படத்தில் இருந்து இரண்டு லுக்கள் வெளியாகியுள்ளன, மேலும் விரைவில் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஏற்கனவே எங்களது இணையதளத்தில் கூறியிருந்தோம்.

மேலும் வெளியான இரண்டு லுக்கிலும் அஜித் புகைப்படம் தான் இடம் பெற்றிருந்தது. இதனால் நயன்தாராவிற்கு கொஞ்சம் வருத்தம் தானாம்.

எனவே மூன்றாம் லுக் போஸ்டர் நயன்தாராவின் கெட்டப்புடன் அவரது பிறந்த நாளான நவம்பர் 18-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் வரும் நவம்பர் 18-ல் அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் நிச்சயம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். என்ன ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு நீங்க தயார் தானே?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.