Viswasam 25th Day Celebration

VIswasam 25th Day :

25 நாட்கள் ஆகியும் விஸ்வாசம் படம் வீர நடை போட்டு வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் தரையில் அமர்ந்து படம் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் செண்டிமெண்ட் படமாக அமைந்து விட்டது.

தற்போது வரை 250-க்கும் அதிகமான தியேட்டர்களில் விஸ்வாசம் திரைப்படம் ஹவுஸ் புல்லாகவே சென்று கொண்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக பிரபல தியேட்டர் ஒன்றில் 25-வது நாள் காட்சியில் உட்கார்ந்து படம் பார்க்க சீட் இல்லாமல் தரையிலேயே அமர்ந்து படம் பார்த்துள்ளார் ரசிகர் ஒருவர்.

அந்த புகைப்படம் சமூக வளையதள பக்கங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் அதனை அதிக அளவில் ஷேர் செய்து விசுவாசத்தின் உண்மையான வெற்றி என மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

Viswasam 25th day

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.