Viswasam 100th Day

Viswasam 100th Day : 100-வது நாளை தொட்டுள்ள விஸ்வாசம் இன்று வரை மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங், தனக்கென தனி வழியை பின்பற்றி வெற்றி கண்ட நடிகராக விளங்கி வருபவர் தல அஜித்.

இறுதியாக இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம்.

அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?

அப்பா மகள் பாசத்தை பேசும் படமாக அமைந்ததால் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி மகிழ்ந்து மாபெரும் வெற்றி படமாக அமைய வழி வகுத்தனர்.

இந்த படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகி விட்டன. ரசிகர்களும் படக்குழுவினரும் இதற்கென தனி ஹேஸ்டேக்குகளை உருவாக்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 100-நாள் வரை வசூல் என்ன என்ற விவரமும் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் கிட்டத்தட்ட ரூ 140 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.