விஷ்ணுகாந்த், ரவியை தொடர்ந்து மூன்றாவது நபர் மீது குற்றம் சாட்டியுள்ளார் சம்யுக்தா.
பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகி அதன் பின்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த், சம்யுக்தா.
கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஒரே மாதத்தில் பிரிந்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். விஷ்ணுகாந்தை தொடர்ந்து சம்யுக்தா தன்னுடன் நிறைமாத நிலவே வெப் சீரிஸ் தொடரில் இணைந்து நடித்த ரவி தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார்.
இவர்கள் இருவரைப் பற்றியும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் பல அதிர்ச்சிகர தகவல்களை கூறி வருகிறார். இந்த நிலையில் சம்யுக்தா லிஸ்டில் மூன்றாவது ஆளாக இணைந்துள்ளார் நிறை மாத நிலவே இயக்குனர் ஹரி.
சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்றில் வெப் சீரிஸ் தொடருக்காக எனக்கும் ரவிக்கும் விருது கிடைத்தது. இயக்குனருக்கு விருது கிடைக்கவில்லை. அதனால் அவர் எங்கள் மீது கோபத்தில் இருந்தார். அதனால் தான் அவரிடம் பேசிய ஆடியோவை விஷ்ணுகாந்திற்கு அனுப்பி பழி தீர்த்துக் கொண்டார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இப்படி சம்யுக்தா தன்னை பற்றி பேசுபவர்களை பற்றி குற்றம் சாட்டி கொண்டே வருவதை பார்த்த ரசிகர்கள் போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கு என கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.