விவாகரத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து தனித்தனியாக விளக்கம் அளித்துள்ளனர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ரீல் ஜோடியாக இணைந்து நடித்து பிறகு ரியல் ஜோடியாக மாறியவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட 15 நாட்களில் பிரிந்து தற்போது விவாகரத்து செய்ய முடிவுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் இதற்கான காரணம் என்ன என தனித்தனியாக விளக்கம் அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஷ்ணுகாந்த் எட்டு மாதங்களாக தன்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சமயத்தாவுக்கு 15 நாட்களில் என்ன தெரிந்து விடும்? என்னுடைய 10 லட்சம் பணமும் போச்சு. என்னுடைய அப்பாவ நான் என்னைக்கும் வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டேன் என்று தான் சொன்னாங்க ஆனா கல்யாணம் அன்னைக்கு அவர் வந்து நின்றார். எங்ககிட்ட எதுவும் இல்லன்னு அவங்க அம்மா சொன்னாங்க நீங்க எதுவும் பண்ண வேண்டாம் நானே கல்யாணம் செலவு மொத்தத்தையும் ஏத்துகிறேன் என்று எல்லாத்தையும் பார்த்தேன். ஆனா இன்னைக்கு என் மேல பழி சொல்லிட்டு பிரிஞ்சு போயிட்டாங்க என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் சம்யுக்தா லைவ் வீடியோ ஒன்றில் கல்யாணத்துக்கு முன்னாடியே அவருக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து போனது. அவள் தான் கல்யாண செலவு முழுவதையும் பார்த்தார் என்பதால் அவர் விருப்பப்படி தான் எல்லாம் நடந்தது. அவர் அச்சிட்ட கல்யாண பத்திரிக்கை டிசைன் எனக்கு பிடிக்காததால் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக நான் தனியாக கொஞ்சம் பத்திரிக்கையை தயார் செய்து கொண்டேன்.

இது பிடிக்காமல் இரண்டு நாட்கள் என்னுடைய போனை எடுக்காமல் வீட்டை விட்டு எங்கோ சென்று விட்டார். அப்போதே நான் இது குறித்து கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பேன். கல்யாணத்துக்கு பிறகும் எங்களுக்கிடையே சிறுசிறு பிரச்சனைகள் வந்தது எதற்கெடுத்தாலும் எங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வரவைத்து அவர்களுடன் என்னை அனுப்பி வைப்பதையே செய்து கொண்டிருந்தார்.

எனக்கு பீரியட் டைம், வலி அதிகமாக இருந்தது அந்த வழியிலும் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் என்று குற்றம் சாட்டியுள்ளார். ‌‌