ஒமைக்ரான் ஒன்னும் பண்ணாது, சீக்கிரம் சரியாகிவிடும் என சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் 10 நாட்களாக படாதபாடு பட்டதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

Vishnu Vishal Tweet After Recovery From Covid : தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை உருவாகி மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது.

ஒமைக்ரான் ஒன்னும் பண்ணாதா?? பத்து நாளாக படாதபாடு பட்ட பிரபல நடிகர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு

தமிழகத்தில் ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒமைக்ரான் ஒன்னும் பண்ணாதா?? பத்து நாளாக படாதபாடு பட்ட பிரபல நடிகர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு

ஒமைக்ரான் வைரஸ் லேசான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சளி, இருமல் போன்றவை இருக்கும். வீட்டிலேயே தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகி விடலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

Cook With Comali 3 Official Contestants List : புது போட்டியாளர்களின் விவரம்! | HD

இப்படியான நிலையில் தனக்கு ஏற்பட்டிருந்தது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தான். ஆனால் பத்து நாட்களாக கடுமையான ஜுரம், தொண்டை வலி என தன்னை படாதபாடு படுத்தி விட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்டது லேசான பாதிப்பு இல்லை என அவர் கூறியுள்ளார். இதனால் ஒமைக்ரான் பாதிப்பும் ஒரு சிலருக்கு கடுமையாக இருக்கும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.