வித விதமாக போஸ் கொடுத்து புகைபிடித்து அந்த போட்டோக்களை வெளியிட்டு அதற்கு ஒரு காரணத்தையும் கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைபிடிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த போட்டோவுடன் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு எனவும் குறிப்பிட்டுள்ளார். அப்போ எதுக்கு இந்த போட்டோவை போடணும் என்று தானே கேக்குறீங்க.
விஷ்ணு விஷால் இந்த வருடத்தோடு புகைபிடிப்பதை நிறுத்த போகிறாராம். இதுவே என்னுடைய கடைசி சிகிரெட் என கூறியுள்ளார்.
2020-ஐ புகைபடப்பிடிக்காத மனிதராக தொடங்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘Smoking is injurious to health’
Finish this year with your last cigarette and start 2020 with a healthy decision 🙂
Im a non-smoker ???? pic.twitter.com/MSpAAHY0nn— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) December 23, 2019