Vishnu Vishal
விஷ்ணு விஷால் தன்னுடைய காதலியுடன் பேட்மிட்டன் விளையாடும் வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் சிலர் கலாய்த்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இவர் நடித்திருந்த ராட்சசன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்திற்கு பிறகு விவாகரத்து, குடிக்கு அடிமை என வாழ்க்கையை துளைத்த விஷ்ணு விஷால் உடற்பயிற்சி மூலமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

அவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ள வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சட்டை இல்லாமல் தன்னுடைய காதலியும் விளையாட்டு வீராங்கனையுமான குட்டா ஜவாலாவுடன் சட்டையில்லாமல் பேட்மிட்டன் விளையாடும் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் இதை நீங்க சட்டை போட்டே விளையாடலாமே எனவும் இவர் தான் உங்க கதையோட ரம்யாவா? எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.