அடுத்த புதிய படத்திற்காக ஆளே மாறியுள்ளார் விஷ்ணு விஷால், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷ்ணு விஷால், தன்னுடைய தயாரிப்பில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த இவர் ராட்சசன் படம் மூலமாக ஆக்ஷன் நாயகனாக மிரட்டி இருந்தார்.

இவர் தற்போது FIR ஃபைசல் இப்ராஹிம் ரயிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மனு ஆனந்த் என்பவர் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் விஷ்ணு விஷால் உடல் எடையை குறைத்து கடுமையாக ஒர்க் அவுட் செய்து ஆளே மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.