
Vishnu Vishal : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த ராட்சசன் படம் மெகா ஹிட்டாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னுடைய மனைவி ரஜினியை தான் விவாகரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார்.
மேலும் எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். அவனை இருவரும் நன்றாக பார்த்து கொள்வோம். தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருக்கும்.
இருவரும் சேர்ந்து வாழ்ந்த காலங்கள் மறக்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் மதியுங்கள் என வேண்டுகோள் வைத்து அந்த அறிக்கையை முடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் தன்னுடைய மனைவியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். அப்படி இருக்கும் நிலையில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.