Vishnu Vishal Divorce

Vishnu Vishal Divorce : தன்னுடைய விவகாரத்துக்கான காரணத்தை முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த வருடம் தன்னுடைய காதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அதற்கான காரணம் என்ன என்பதை ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய் – என்னவொரு மாஸ்டர் பிளான்!

என்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணமாக என்னுடைய திருமணத்தை தான் நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் அது நிலைக்கவில்லை.

முதலில் நான் யாருடனும் அவ்வளவாக பேசமாட்டேன். இதனால் என்னுடைய பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. எனவே படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்பதற்காகவே நடிகைகளுடன் நன்றாக பேசி பழகினேன்.

அதுவே எனக்கு பிரச்சனையாக முடிந்து விட்டது. என்னுடைய மனைவி முன்பு போல் நீ இல்லை.. மாறி விட்டாய் என பிரச்சனை தொடங்கவே விவாகரத்தில் முடிந்து விட்டது.

இருப்பினும் நான் ரஜினியுடன் தற்போது வரை நல்ல நட்புடன் இருந்து வருகிறேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.