Vishal Movie
Vishal Movie

Vishal Movie : விஷால் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியாகி சுமாரான வெற்றியை பெற்ற படம் ஆம்பள.

குடும்ப உறவின் மேன்மையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் பாடல்களுக்காக பேசப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து விஷால் – சுந்தர் சி கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

அஜித் ஸ்டைலில் பைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன் – எந்த படத்தில் தெரியுமா?

இதன் படப்பிடிப்பு அண்மையில் துருக்கியில் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை அங்கேயே நடைபெறவுள்ளது.

கத்தி சண்டை படத்தை தொடர்ந்து விஷால் ஜோடியாக தமன்னா இப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பில் விபத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷால் – புகைப்படத்துடன்.!

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்திற்காக ஒரு அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சியை படக்குழு துருக்கியில் படமாக்கி வருகிறார்களாம்.

கிட்டத்தட்ட ஹாலிவுட் பட பாணியில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சண்டை காட்சிக்காக விஷால் பல ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here