Vishal31 Start With Pooja

விஷாலின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Vishal31 Start With Pooja : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தயாரிப்பாளராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக துப்பரிவாளன், எனிமி உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக உள்ளன.

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் அடுத்ததாக து.ப சரவணன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது இந்த திரைப்படம் பூஜையுடன் தொடங்கி உள்ளது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்ன கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் பூஜை நடைபெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.