Vishal Will Direct Vijay
Vishal Will Direct Vijay

நடிகர் விஷால் விஜய்யை நிச்சயம் இயக்குவார் என அவரின் மேனேஜர் கூறியுள்ளார்.

Vishal Will Direct Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

மேலும் இவர் துப்பறிவாளன் 2 படத்தின் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் இந்தப் படத்தின் பணிகள் பாதியிலேயே நின்று விட்டன.

ஜோடி சூப்பர் பா.. தன்னுடைய வருங்கால மனைவியிடம் விஷ்ணு விஷால் வெளியிட்ட புகைப்படம்.!

இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் விஷால் ரசிகர் மன்றம் சார்பாக பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் மேனேஜர் ஹரி கிருஷ்ணா அவர்கள் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

விஷால் அண்ணா சினிமாவில் மட்டும் ஹீரோவாக இல்லை நிஜத்திலும் ஹீரோ. அவர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என ஹரி கிருஷ்ணா கூறியுள்ளார்.

விஷால் அண்ணாவிற்கு விஜயை இயக்க வேண்டும் என்பது கனவு அதை நிச்சயம் அவர் செய்து முடிப்பார் என கிருஷ்ணா கூறியுள்ளார்.