Actor Vishal : Sri reddy's Shocking Complaint About Vishal | Tamil Cinema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema News
விஷால் மோசமான ஆள், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் என அவர் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

Actor Vishal : தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் விஷால். நடிகர் சங்க தேர்தல் நெருங்கி வருவதால் ஒட்டு சேகரிக்கும் வேளைகளில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ரீ ரெட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் விஷாலை பற்றி தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

என் ஒட்டு உங்களுக்கு இல்லை விஷால், ஒப்பனாக அறிவித்த நடிகை – ஒத்த வீடியோவால் வந்த வினை.!

விஷால் மோசமான மனிதர், பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. பலரின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்றெல்லாம் கூறி வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஸ்ரீ ரெட்டி இவ்வாறு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆரம்பத்தில் ஸ்ரீ ரெட்டி தமிழ் நடிகர்களின் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வாய்த்த போது ஆதாரத்துடன் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவு அளிக்காததால் தற்போது இப்படியான வேலைகளை செய்து வருகிறாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.