Vishal update
 Vishal update

 Vishal update :

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’.

இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

விஷால் அனிஷாவின் திருமண தேதி – நிச்சயதார்த்தம் கூட இங்க தானாம்.!

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.17ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளதாம்.

பணத்திற்காக தான் திருமணம்? – விஷாலின் காதலி அதிரடி பதில்.!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

மேலும் அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் இப்படத்தில் ஒரு சம்பவமாக இடம்பெறுகிறதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.