Vishal Sister Helps to TN Hospital
Vishal Sister Helps to TN Hospital

விஷாலின் கோரிக்கையை ஏற்று தமிழக மருத்துவமனைகளுக்கு அவரின் தங்கை செய்துள்ள உதவி பாராட்டுகளை பெற்று வருகிறது.

Vishal Sister Helps to TN Hospital : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஷால் கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்.

அவரைப் போலவே அவரின் தங்கையும் மருத்துவருமான நீஷ்மா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு PPE செட் கருவிகளை வழங்கி வருகிறார்.

கவினுக்கு பதில் லாஸ்லியா என்னை அறையட்டும் – கவினை அறைந்த நண்பர் டிவிட்

இதனை அறிந்த விஷால் தன்னுடைய தங்கையிடம் தமிழக மருத்துவமனைகளுக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

விஷாலின் கோரிக்கையை ஏற்று அவரது தங்கை MMC மருத்துவமனைக்கு 200 செட் வழங்கினார். மேலும் பல மருத்துவ மனைகளுக்கு வழங்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் விஷாலின் தங்கை செய்த மருத்துவ உதவி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.