விஷாலின் தங்கை ஐஸ்வர்யா பெண் குழந்தைக்கு அம்மாவான பல்வேறு இடங்களில் இதே தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் அளித்து கொண்டாடியுள்ளனர் விஷால் குடும்பத்தினர்.

Vishal Sister Blessed with Girl Baby : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டு வலம் வரும் இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் தேவி அறக்கட்டளையின் மூலமாக தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஷால் அவர்களின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸ் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

அதே போன்று, ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும், பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிற்கான தங்க நாணயம் வழங்கப்பட்டது.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை :

பெங்களூர் :

ஐதராபாத் :