Vishal

Vishal Next Movie : லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமாக விளங்கி வருபவர் விஷால். இவர் இரும்புத்திரை, சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் ரிலீஸை தொடர்ந்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமாக்கியுள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகயுள்ளது. மேலும் இந்த படத்தை பிரபல இயக்குனரான சுந்தர். சி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் சி சிம்புவை வைத்து லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் வரும் ஜனவரி இறுதியில் திரைக்கு வருவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.