Vishal Movies

Vishal Movies : விஷால் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பறிவாளன்.

ஷெர்லாக் ஹோம்ஸ் நாவலை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே இந்த படத்தையும் இயக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் முழு படப்பிடிப்பும் லண்டனில்தான் நடைபெறவுள்ளதாம்.

ஏற்கனவே சுந்தர் சி படத்துக்காக இரண்டு மாதங்கள் துருக்கியில் தங்கியிருக்கும் விஷால், அடுத்து இந்த படத்துக்காகவும் சில மாதங்கள் லண்டனில் முகாமிட உள்ளாராம்.

இதை கேள்விப்பட்டு சிலர் விஷாலுக்கு இங்கு நிறைய பிரச்னைகள் இருப்பதாகவும் அதிலிருந்து சில காலம் ஒதுங்கி இருக்கவே அவர் இப்படி வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்துவதாகவும் கூறுகின்றனர்.

இதுபோக இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஷால் நடிக்கவுள்ளார். பி.எஸ்.மித்ரனுக்கு பதிலாக அறிமுக இயக்குனர் ஆனந்த் இப்படத்தை இயக்குகிறாராம்.

சுந்தர் சி படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம் விஷால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here