Vishal Marriage Update
விஷாலின் திருமணம் நின்று விட்டதாக தகவல் ஒன்று வைரலாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Vishal Marriage Update  :தமிழ் சினிமாவில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர்களில் விஷால் முதல் இடத்தில் உள்ளார்.

மண்டபம் கட்டிய பிறகுதான் திருமணம் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் விஷால் மற்றும் ஆர்யா.

ஆனால், ஆர்யாவிற்கு தற்போது திருமணம் முடிந்து சில மாதங்களேயான நிலையில், விஷாலும் தனது திருமண நிச்சயதார்த்தம் பற்றின தகவல்களையும் அனிஷா அல்லாயுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

அறுபது வயதடைந்த அனைவரும் 60ம் கல்யாணம் கட்டாயம் நடத்த வேண்டுமா?

திருமணம் அக்டோபர் மாதம் திருமணம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த விஷால் புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

இதனால் சினிமா உலகத்தில் அனிஷாயுடனான விஷாலின் திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் பரவலாக கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை திருமணம் நடத்துவதற்கான வேலையும் இருவீட்டிலும் இன்னும் தொடங்கவில்லை, அதே சமயம் நின்றுவிட்டதாகவும் விஷால் தரப்பில், அனிஷா தரப்பில் இருந்தும் யாரும் உறுதி அளிக்கவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.