Vishal Marriage Update
விஷால் மற்றும் அனிஷா இருவரின் திருமணம் நிச்சயம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Vishal Marriage Update : விஷால் மற்றும் தெலுங்கு நடிகை அனிஷா இருவருக்கும் அக்டோபர் மாதம் திருமணம் செய்யப்பட இருந்த நிலையில், விஷாலின் அனிஷாவுடனான திருமணம் நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அனிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த விஷாலுடனான நிச்சயதார்த்தம் நடந்த படத்தை நீக்கினார்.

இதனால், சினிமா வட்டாரங்களில் விஷாலின் திருமணம் நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், அதனை மறுத்தோ அல்லது ஒப்புக்கொண்டோ இரு தரப்பினரும் எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனவே, விஷாலின் திருமணம் நின்றதாகவே அனைவரும் கருதிய போது , விஷாலின் 42-வது பிறந்தநாள் வந்தது.

விஷாலின் பிறந்தநாள் அன்று அனிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டார்” என்று தொடங்கிய வாழ்த்து வரிகளை தொடர்ந்து “நீங்கள் பிறந்ததே பிரகாசிக்கத்தான், உங்களின் இருப்பை என்றும் நான் போற்றுவேன், உங்களை தேடி மகத்துவம் வருகிறது நம்பிக்கையுடன் இருங்கள்” என்றும் தனது வாழ்த்துக்களை ஷேர் செய்தார் அனிஷா.

அதில் அனிஷா கடைசியாக “என்றும் அன்புடன்” என்று முடித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

இதனால், விஷால் மற்றும் அனுஷாவின் திருமணம் நிச்சயம் நடக்கும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here