Vishal Marriage : பணத்திற்காக தான் விஷால் உங்களை திருமணம் செய்கிறாரா? என நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அனிஷா தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் 39 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
ஒரு வழியாக இவர் தற்போது ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனை விஷாலும் உறுதி செய்திருந்தார்.
திருமணம் குறித்த மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் – கல்யாணம் பண்ணா இப்படி தானாம்.!
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலின் காதலி அனிஷா ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். என கூற அதற்கு அனிஷா கோபப்படாமல் விஷால் பணத்திற்காக என்னை காதலிக்கவில்லை என கூறியுள்ளார்.
அப்போதும் அடங்காத நெட்டிசன்கள் ஆட்டு மூஞ்சி மாதிரி இருக்க உங்களையெல்லாம் யார் காதலிப்பார்கள்? வருவே விஷாலுக்கு பொருத்தமான ஜோடி என கூறியுள்ளார்.
மீண்டும் ரஜினி ஸ்டைலுக்கே மாறிய விஜய் – தளபதி 63 இப்படி தான்.!
இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் இதையெல்லாம் கண்டுக்காம பிரீயா விடுங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்காதீங்க.
இவர்கள் இதே வேலையாக திரிகிறார்கள் என கூறி அனிஷாவிற்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.