நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நியூ போஸ்டர் வெளியாகி உள்ளது.

லத்தி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்க எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் தகவலை நியூ போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

அனல் தெறிக்கும் அப்போஸ்டரில் நடிகர் விஷால் தாடி மீசையுடன் கோபத்துடன் கையில் துப்பாக்கியை பிடிக்க அவருடன் நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் இணைந்துள்ளனர். இந்த புதிய தோற்றத்தில் இருக்கும் இவர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.